நடப்பு தேர்தல் முறை விகிதாச்சார முறையைக் காட்டிலும் மேலானது என தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொல்கிறார்.
“நான் அந்த விகிதாச்சார முறையை ஆய்வு செய்தேன். அதில் பல பலவீனங்கள் உள்ளன. மலேசியாவைப் போன்ற வளரும் நாட்டுக்கு முதலில் கம்பத்தைத் தாண்டும் முறை (first-past-the-post-FPTP) மிகவும் நல்லது,” என அவர் சொன்னார்.
“உலகம் முழுவதும் FPTP முறையை 71 நாடுகள் பின்பற்றுகின்றன. அதில் ஆறு மட்டுமே விகிதாச்சார முறைக்கு மாறியுள்ளன,” என அவர் கோலாலம்பூரில் ஏழாவது மாணவர் உச்ச நிலைக் கூட்டத்தில் கூறினார்.
கடந்த தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளில் எதிர்க்கட்சிகள் 51 விழுக்காட்டைப் பெற்றதுடன் ஒப்பிடுகையில் 47 விழுக்காட்டைப் பெற்ற பிஎன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதைத் தொடர்ந்து தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்ற யோசனைகளுக்கு வான் அகமட் பதில் அளித்தார்.