நாம்வீ-யின் புதிய திரைப்படத்தை உத்துசான் சாடுகின்றது

gintellநாம்வீ வெளியிட்டுள்ள Kara King என்னும் மூன்றாவது திரைப்படத்தை உத்துசான் மலேசியா கடுமையாகக் குறை கூறியுள்ளது.

குறிப்பாக அந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரம் தவறுதலாக மலாய் ஜோடி ஒன்றின் மீது சிறுநீர் கழித்து விடுவதைக் காட்டும் தொடக்கக் காட்சியை அந்த ஏடு சாடியுள்ளது.

‘Kenapa masih buta?’ (நாம் ஏன் இன்னும் பார்வையற்றவர்களாக இருக்கிறோம் ?) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் மலாய் சமூகம் பற்றிய நாம்வீ-யின் ஆணவத்தைக் காட்டும் முயற்சி அது என கூறப்பட்டுள்ளது.

அந்த சம்பந்தப்பட்ட காட்சியில் போலீஸ்காரர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கும் பொருட்டு சாலை ஒரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த நாம்வீ திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜோடியின் மீது சிறுநீர் தவறுதலாக பட்டு விடுகின்றது.

“அந்தக் காட்சியின் மூலம் நாம்வீ என்ன சொல்ல வருகிறார் ? ஊழலையும் மலாய்க்காரர்கள் மீது சிறுநீர் கழிப்பதையுமா ? இது தான் மலேசியாவில் சீனர் பண்பாடா ?” என்றும் அந்தக் கட்டுரை வினவியது.