குற்றச்செயல்களுக்கு இனம் காரணமல்ல, வறுமைதான் காரணம்

poor12உங்கள் கருத்து  ‘குற்றவாளிகளில் மிகப் பலர் இந்தியர்கள் என்றால் இந்தியர்களில் பெரும்பாலோர் வறிய நிலையில் இருப்பதுதான் அதற்குக் காரணம்’

ஜாஹிட்டின் திறந்த இல்ல உபசரிப்பையும் குண்டர் கும்பல் விட்டு வைக்கவில்லை

ரூபிஸ்டார்: உள்துறை அமைச்சரே, மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இப்படி ஒரு கதையா?

உங்கள் திறந்த இல்ல உபசரிப்பில் குண்டர்கள் பாதுகாப்புப் பணம் கேட்டிருந்தால் போலீசார் அவர்களை விட்டு வைத்திருப்பார்களா, உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பார்களே.

பெயரிலி _3e86:  ஐயா,   இரகசிய  கும்பல்களுக்கும் போலீசுக்குமிடையில் ஒரு நன்னெறி கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது-  “என்னைத் தொந்திரவு செய்யாதே, நான் உன்னைத் தொந்திரவு செய்ய மாட்டேன்” என்பதுதான் அது.

சில தறுதலைப் பசங்கள்தான் இரகசியக் கும்பல் தலைகளின் ஆதரவில்லாமல் சில நேரங்களில் துள்ளுவார்கள். அவர்களைப் போலீசார்  அல்லது குண்டர் கும்பல்களே தீர்த்துக் கட்டிவிடுவார்கள்.

குண்டர்கும்பலின் பெருந்தலைகள் ‘சில்லறைத்தனமான’ கொள்ளைகளில் ஈடுபட மாட்டார்கள். பணத்தைச் சலவை செய்தல், போதைப் பொருள், விபசாரம், சட்டவிரோதமாக பணம் கொடுக்கல்-வாங்கல்(ஆ லோங்) போன்றவை அவர்களின் தொழில்கள்.

ஜெஸ்ஸி:  ஜாஹிட்டின் கூக்குரலைப் பார்த்தால் சட்டத்தைச் சரியானபடி செயல்படுத்த முடியாதிருப்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.

அப்பும்: ஜாஹிட்டையே குறை சொல்வதும் சரியல்ல.  இன்றுள்ள நிலை ஒரே நாளில் உருவானது அல்ல. முன்னாள் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்கும் இதில் பெரும்பகுதி பொறுப்பு உண்டு.

விழிப்பு தேவை: மேல் அதிகமான சட்டங்கள் எதற்கு? இருக்கும் சட்டங்களே போதும். செம்மையான செயலாக்கம்தான் தேவை.

பிரச்னைகள் (குண்டர்தனம் போன்றவை) வளர்ந்தோங்க இடமளித்துவிட்டு பின்னர் அதை ஒழிக்க வஜ்ராயுதத்தைத் தேடுவது ஏன்?  ஒரு வாரத்துக்கு மட்டும் கெடுபிடி காட்டிவிட்டு பிறகு இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்குவது சட்டத்தைச் செயல்படுத்துவது ஆகாது.

தே: உள்துறை அமைச்சருக்கே இந்த நிலையென்றால் சாமானியர்களான எங்களின் நிலை என்ன?

விஜார்ஜ்மை:  60, 70-களில் கம்முனிசத்தை ஒழிக்க முடிந்தது. ஆனால், இந்தக் கேடுகெட்ட குண்டர்களை ஒடுக்க முடியாமல் போனது ஏன்?

ஊழல் பெருகி விட்டதுதான் காரணம்.

தொலு:  குற்றவாளிகளில் மிகப் பலர் இந்தியர்கள் என்றால் இந்தியர்களில் பெரும்பாலோர் வறிய நிலையில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.

இதற்கு யார் பொறுப்பு? அரசுதான் பொறுப்பு. அரசாங்கம் பாகுபாடு காட்டுவதை விட்டொழிக்க வேண்டும்.

டார்க் நைட்: ஒரு காலத்தில் இந்தியர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைவாகத்தான் இருந்தது. தோட்டப்புறங்கள் மேம்படுத்தப்பட்டு அவர்கள் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டு நகர்புறங்களில் பிழைப்புத் தேடி வந்தார்கள். அங்கே வறுமை அவர்களை விரட்டியது. வேறு வழி தெரியாது குற்றச்செயல்களை நாடினார்கள்.

அவர்களின் துயர்தீர்க்க மஇகா எதுவும் செய்யவில்லை; அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. ஏழை இந்தியர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டதுதான் இந்தியர்களிடையே குற்றச்செயல்கள் பெருகி இருப்பதற்குக் காரணமாகும்.