வன்முறை சார்ந்த குற்றச்செயல்களின் பெருக்கம் வணிகத்தைக் கெடுக்கிறது என்று கூறும் சீன மலேசிய வணிகச் சமூகம் அதை ஒடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வெண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதைக் கண்டு முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும் மிரண்டு ஓடுகிறார்கள் என மலேசிய சீனர் வர்த்தக, தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் லிம் கொக் சியோங் கூறினார்.
“மக்கள் பயப்படுகிறார்கள். அதனால் பணத்தை முதலீடு செய்வதில்லை. இரவில் வெளியில் வரவே அஞ்சுகிறார்கள்”, என்றாரவர்.
காவல் துறையினரே வணிகர்களாக மாறிவிட்டதால் (அதுவும் முதலே இல்லாமல்)இன்னும் அதிகமாக குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என நம்புவோம்.
C4 எப்படி வந்தது??????பதில் இல்லையே