சினிமா ரசிகர்கள்: நாட்டுப்பண் சட்டத்தைக் கட்டாயமாகச் செயல்படுத்தாதீர்

1-cinemaஆகஸ்ட் 28-இலிருந்து செப்டம்பர் 3வரை படக் கொட்டகைகளில் நாட்டுப்பண் இசைக்கப்படுவது தொடர்பில் மாறுபட்ட எதிர்வினைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான ரசிகர்களுக்கு அதில் மறுப்பு இல்லை. ஆனால், நாட்டுப்பண் சட்டம் 1968, கட்டாயமாக செயல்படுத்தப்படுவதைத்தான் அவர்களால் ஏற்க முடியவில்லை. அது தேவை இல்லை என்கிறார்கள். அச்சட்டம் நாட்டுப்பண்ணை அவமதிப்போருக்கு ரிம100 அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.

உள்ளூர் படத் தயாரிப்பாளரான ஹுவாங் ரூய் சியாங் (இடம்), அது “ஓவராக” தெரிகிறது என்றார்.

“எதுக்கு இந்த நடவடிக்கை? நாட்டுப்பற்றை வளர்க்க எத்தனையோ வழிகள் உள்ளன”, என்றார்.

ஆசிரியரான ஜக்பிரித் கோர், “சினிமாக்களில் நாட்டுப்பண் இசைப்பது நமது நாட்டுப்பற்றைக் காண்பிக்க உதவும்”, என்றார். ஆனால், சட்டம், தண்டனை எல்லாம் தேவையில்லை என்றார்.

நாட்டுப்பற்றைக் காண்பிக்க அது நல்ல வழி என்று கூறிய விற்பனை நிர்வாகியான முகம்மட் ஹபிஸ் அப்துல் ஹமிட், சிறைத்தண்டனை தேவை இல்லை என்றார்.

“சமூகக் சேவை செய்யச் சொல்லலாம்”, என்றார்.