தேசிய சேவை பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் கருத்தரிப்புச் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள். இதற்குமுன் பயிற்சிக்குச் சென்ற சிலர் கருத்தரித்திருந்தும் அது பற்றி அறியாமல் இருந்ததும் சிலர் அதை இரகசியமாக வைத்துக்கொண்டதும்தான் இதற்குக் காரணமாகும்.
அப்பயிற்சிகள் “உடலை வருத்திச் செய்யப்படுபவை” என்பதால் கருத்தரித்துள்ள பெண்களுக்கு அவை “ஆபத்தானவை” என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிம் கூறினார்.
“சோதனையில் அவர்கள் கருத்தரித்திருப்பது தெரிய வந்தால் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்”, என்று கூறிய அவர் மகளிர் அமைப்புகள் பரந்த கண்ணோட்டத்தில் இதைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மகளிர் அமைப்புகள் அந்தச் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
பள்ளி மாணவிகளுக்கு இது ஒரு விசப்பரீட்சை ! கூர்வாளில் ஏறி நிற்பதை போன்றது. இல்லையென்றால் ..எதுவும்மில்லை ! ஆனால் அமாம் என்றால் ? முடிந்தது பள்ளிப்பயணம் , பறந்திடும் குடும்ப மானம் , வாழ்கையே அஸ்தமம்!! ஆகவே , நம் இந்திய மாணவிகள் தயவாய் தப்பான காரியங்களில் கவனத்தை தொலைத்துவிடாதீர்கள் ! ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் பரிட்சை தட்கல் நீங்கள்தான்!!