அரசப் பேராளர்: சமய விவகாரங்களில் யோசித்துப் பேசுவீர்

Raja-Nazrinசமய விவகாரங்கள் குறித்து கருத்துரைப்போர்  எண்ணிப் பார்த்துப் பேச வேண்டும், பலஇனச் சமுதாயத்தில் சினமூட்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா கூறியுள்ளார்.

சமயம்  என்பது  ஒவ்வொரு சமயத்தாரும் உயர்வாகப் போற்றும் ஒன்றாகும்.

“எனவே, அதன் பேரில் தெரிவிக்கப்படும் ஒவ்வொரு சொல்லும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் அறிவார்ந்த முறையில் அமைந்திருக்க வேண்டும். உணர்ச்சிக்கு இடமளித்து விடக்கூடாது. கருத்து வேறுபாட்டைத் தெரிவிப்பதாக இருந்தாலும் அது சர்ச்சையை உண்டுபண்ணுவதாகவோ  சினமூட்டுவதாகவோ அமைந்து விடக்கூடாது. சினமூட்டும் கருத்துகளைப் பொதுவில் தெரிவிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்”. ராஜா நஸ்ரின், இன்று ஈப்போவில் பேராக் சட்டமன்றத்தின் 13வது கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.