பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமட் நாசிர் முகமட் நோர்-க்கு ‘கொலை மருட்டல்’ விடுத்ததாக கூறப்படும், அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தையின் பெற்றோர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அந்தத் தகவலை உறுதி செய்த சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங்இன்று பிற்பகல் போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த அடையாள அணிவகுப்பு ஒன்றில் அந்தப் பெற்றோரை தலைமை ஆசிரியர் அடையாளம் காட்டியதாக தெரிவித்தார்.
“அவர் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கில் அரசு வழக்குரைஞருடைய ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.
மாணவர்கள் குளியலறையில் உணவு உட்கொள்ளுமாறு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையாக மாறிய இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜுலை 25ம் தேதி தலைமை ஆசிரியர் சமர்பித்த போலீஸ் புகார் அடிப்படையில் அந்தப் பெற்றோர் அழைக்கப்பட்டதாக ஜுனாய்டி சொன்னார்.
“அந்தப் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு வந்து ,” நீங்கள் பள்ளிக்கூடத்தில்
பாதுகாப்பாக இருக்கலாம் ஆனால் பள்ளிக்கு வெளியில் அப்படி அல்ல,”என சொன்னதாக போலீஸ் புகாரில் தலைமை ஆசிரியர் கூறிக் கொண்டுள்ளதாகவும் ஜுனாய்டி தெரிவித்தார்.
இவன் ஒரு நரியன்! மனிதனை மதிக்க தெரியாதவன்….!!!