மந்திரி புசார் காலித்: சுதந்திரம் குறித்த உண்மைகள் விளக்கப்பட வேண்டும்

khalidநாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும்  எழுதப்பட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம்  வலியுறுத்தியுள்ளார்.

சில உண்மை நிலவரங்கள் பற்றி தெளிவாக இல்லாததே அதற்குக் காரணம்  என்றார் அவர்.

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து வரலாற்று ஆசிரியர்களிடமும்  கல்வியாளர்களிடமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் சுதந்திரப்  போராட்டத்தின் உண்மை நிலை அடிப்படையில் வரலாறு திரும்ப எழுதப்பட  வேண்டும் என்றும் காலித் சொன்னார்.

“வரலாறு என்பது நடந்த உண்மை நிகழ்வுகள் அடிப்படையில் அமைந்ததாகும்.  என்றாலும் நிகழ்வுகளுக்கான காரணங்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்களுடைய  கருத்துக்கள் மாறுபட்டுள்ளன.”

“அந்த வேறுபாடுகள் விளக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு 1946ம் ஆண்டு  மலாயான் யூனியனுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டது முதல் நாட்டின் சுதந்திரப்  போராட்டம் தொடங்கியதாக சொல்லப்படுகின்றது. என்றாலும் ஆப்பிரிக்காவில்  உள்ள காலனிகளுக்கு பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரம் வழங்கத் தொடங்கிய போது  சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக சிலர் சொல்கின்றனர். அடுத்து அவர்கள்
மற்ற காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கினார்,” என்றார் அவர்