குண்டர் கும்பல்கள் பட்டியலை உள்துறை அமைச்சு வெளியிடும்’

gangஉள்துறை அமைச்சு விரைவில் குண்டர் கும்பல் பட்டியலையும் அவற்றின்  உறுப்பினர்கள் செய்துள்ள குற்றங்களையும் விரைவில் அறிவிக்கும்.

அந்தப் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர்
வெளியிடப்படும் என அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சொன்னார்.

“சட்ட விரோத அமைப்புக்கள் என வகைப்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்கள்  பட்டியலும் அவை செய்த குற்றங்களும் எங்களிடம் உள்ளன,” என அமெரிக்க  நாடாளுமன்ற உறுப்பினர் Eni Faleomavaegaவை புத்ராஜெயாவில் சந்தித்த பின்னர்
அவர் நிருபர்களிடம் கூறினார்.

“குண்டர் கும்பல்கள் பற்றிய தகவல் வெளியிடப்படுவது, குற்றச் செயல்களை  ஒடுக்குவதில் போலீசார் கொண்டுள்ள ஈடுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வகை  செய்யும்.”

“குற்றச் செயல்களுக்கு எதிரான போலீஸ் முயற்சிகளுக்கு பொது மக்களுக்கும்  ஆதரவு அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அது ஏற்படுத்தும்.”

“அந்தப் பட்டியல் மூலம் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் ஒர் இனத்தை மட்டும்  சார்ந்தது அல்ல என்பதையும் மற்ற இனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும்  மக்கள் உணருவர்,” என்றும் ஸாஹிட் சொன்னார்.

“குண்டர் கும்பல்களில் இந்தியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக பலர்  சொல்கின்றனர். நிலைமை அப்படி இல்லை. மலாய்க்காரர்களிடமும் சீனர்களிடமும்  குண்டர் கும்பல்கள் உள்ளன,” என்று நாடு முழுவதும் நடத்தப்படும் Ops Cantas  பற்றி விளக்கிய போது அவர் தெரிவித்தார்.

 

TAGS: