அக்டோபர் மாதம் நிகழும் அம்னோ தேர்தலில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் என்ற தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபீடா அஜிஸ் போட்டியிட மாட்டார்.
1975ம் ஆண்டு முதல் அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக அவர் இருந்து
வருகிறார். இவ்வாண்டு அம்னோ தேர்தலில் புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
நான் அந்தப் பதவியை போட்டியின் மூலம் பெற்று வந்துள்ளேன். நியமனத்தின் மூலம் அல்ல என அவர் மேலும் கூறினார்.
“நான் என்றென்றும் அந்தப் பதவியை வகிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். எனக்கு இப்போது 70 வயதாகிறது. இளம் தலைவர்கள் போட்டியிடுவதற்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும்,” என ஜார்ஜ் டவுனில் மகளிர் தலைமைத்துவக் கருத்தரங்கில் உரையாற்றிய பின்னர் ரபீடா நிருபர்களிடம் பேசினார்.
பொறுப்பான பேச்சு , முதிர்ச்சியான சிந்தனை ஆனால் மாட்டு பண்ணை சிக்கலில் பதவிதுறந்த – வெளியேற்றபட்ட கோமாளி மீண்டும் ஒட்டிக்கொள்ள வந்துவிட்டாரே ? UMNO மகளீர் அணியின் நிலை என்னாகபோகுதோ ?