ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி மாணவர்களை தான் விசாரித்ததாகச் சொல்லப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது.
மஇகா-விடம் சில பெற்றோர்கள் மாணவர்களை விசாரித்ததாக கூறியுள்ளது குறித்து கருத்துரைத்த சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங் அவ்வாறு சொன்னார்.
“அப்படி ஏதுமில்லை. நான் அத்தகைய உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு செய்யுமாறு எந்த அதிகாரியையும் நான் கேட்டுக் கொள்ளவில்லை. எது எப்படி இருந்தாலும் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் ?” என அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் போலீசார் தங்கள் பிள்ளைகளை விசாரித்துள்ளதாக பெற்றோர்கள் தம்மிடம் புகார் செய்துள்ளதாக மஇகா வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி விடுத்துள்ள அறிக்கைக்கு ஜுனாய்டி பதில் அளித்தார்.
தலைமை ஆசிரியர் முகமட் நாசிர் முகமட் நூருக்கு எதிராக கொலை மருட்டல் விடுத்ததாக நேற்று அடையாள அணிவகுப்பு ஒன்றில் மாணவர் ஒருவரின் தந்தையான 32 வயது குமரேசனை அந்தத் தலைமை ஆசிரியர் அடையாளம் காட்டினார்.
அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 9ம் தேதி அவர் மீது
கிரிமினல் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.