அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாட்ரியையும் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமாரையும் மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான அறிவிப்பை அரசாங்கத் தரப்பு கடந்த வெள்ளிக் கிழமை சமர்பித்துள்ளது.
வெள்ளிக் கிழமை முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாளாகும்.
அறிவிப்பு சமர்பிக்கப்பட்டுள்ளதை இரண்டாவது துணை சொலிஸிட்டர் ஜெனரல் துன் மஜிட் துன் ஹம்சா குறுஞ்செய்தி வழி இன்று உறுதிப்படுத்தினார்.
இனி அந்த வழக்குக் கூட்டரசு நீதிமன்றத்துக்குச் செல்லும்.
அன்வார் விசாரணையில் டத்தோ ஷாபியை அரசு சார்பு வழக்கறிஞராக நியமித்ததுபோல் இவ்வழக்கில் கோபின் சிங் டியோவை அரசு சார்பு வழக்கறிஞராக நியமித்தால் உண்மை குற்றவாளியைக் கண்டறிய வழிபிறக்கும்.
நடக்குமா இந்த பி என் ஆட்சியில்????
தற்போதைய மேல்முறையீடு ஒரு நாடகமே என்று எண்ணத் தோனுகிறது…!!!!
குறைந்தபட்சம் வழக்கறிஞர் மன்றம் சிபாரிசு செய்யும் ஒரு வழக்கறிஞரையாவது அரசு சார்பு வழக்கறிஞராக ஏற்கத் தயாரா????
மூசா சாபி விசாரணைக்கு அழைக்கப்படுவாரா????
எப்படி இருப்பினும் இந்த மேல்முறையீட்டு தீர்ப்பு மக்கள் எதிர்ப்பார்த்த முடிவாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன்…!!!!!!
நீதி நிலைக்குமா இந்த மண்ணில்?????