‘கல்விப் பெருந்திட்ட இறுதி நகல் வெளியிடப்பட வேண்டும்’

blue printமலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் இறுதி நகலைக் கல்வி அமைச்சு உடனடியாக வெளியிட  வேண்டும் என மலேசியாவுக்கான நடவடிக்கைத் திட்ட கூட்டணி (GBM)  விரும்புகிறது. அதற்குப் பின்னர் அதன் அமலாக்கத்தைத் தாமதப்படுத்தலாம் என  அது கூறியது.

சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்த பரிந்துரைகள் போதுமான அளவுக்குப்  பரிசீலிக்கப்படாமல் அந்தப் பெருந்திட்டத்தின் இறுதி நகல் இறுதியாக்கப்பட்டு  செப்டம்பர் 6ம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் குறித்து பல இனங்களையும்  கொண்ட 25 உறுப்பினர் கூட்டணியின் தலைவர் தான் இயூ சிங் கவலை  தெரிவித்தார்.

இந்த நாட்டில் கல்வி முறை “அரசியல் காற்பந்தாக” மாற்றப்படுவதற்கு
சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார் அவர்.

“ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெருந்திட்டம் தாமதப்படுத்தப்பட  மாட்டாது என கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் சொல்வது நியாயமற்றது,”  என தான் இன்று நிருபர்களிடம் சொன்னார்.