முடிவில், அரசாங்கக் கொள்கைகளே இந்திய சமூகத்தின் ஆதரவு பிஎன்னுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும், மற்றபடி கட்சிகள் இணைவதால் அந்த ஆதரவு கிடைக்கும் என்று கூற முடியாது.
“பிரச்னை, ஒன்றிணைதல் என்பதற்கும் அப்பாற்பட்டது. இந்திய சமூகத்தின் ஆதரவைப் பெறுவது கொள்கைகளையும் வேறு பலவற்றையும் பொறுத்துள்ளது”, என்கிறார் என மஇகா செனட்டர் ஜஸ்பால் சிங்.
“அரசாங்க வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்தியர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது ஒன்றிணைவதைவிடவும் முக்கியமானது”, என்று மஇகா பொருளாளருமான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பல கட்சிகள் குழப்பத்தை உருவாக்குவதை விட மஇகாவில் இணைவதே மேல். இன்று நாட்டில் இளைஞர்கள் கெடுவதற்கு பலகட்சிகள் காரணம். அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவதால் தப்பில்லை. தொங்கு அட்னன் கூட்டரசு அம்மைச்சர் அவர்களுக்கு நன்றி.
இந்திய அரசியல் கட்சிகள் ஒரே குடையின் கீழ் வரவேண்டுமென நினைப்பதில் தப்பில்லை. ஆனால் அது சாத்தியமில்லை. அரசாங்கம் இந்தியர்களை இந்நாட்டின் உரிமைபெற்ற குடிகளாகக் கருதி அவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். குற்றச் செயல்களில் இந்திய இளைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர் எனப் புள்ளி விபரங்களைப் பாட்டாய்ப் பாடுவதை விட்டுவிட்டு அவர்களுக்கு உண்மையாய் உதவ அரசாங்கம் முன்வர வேண்டும்.
அம்னோவே, இந்நாட்டு இந்தியர்களை திட்டமிட்டு பிரித்தாளும் போது, அரசியலில் இந்தியர்கள் எப்படி ஒன்று சேர்வது? தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், இந்திய முஸ்லிம்கள் என்று அம்னோ அரசாங்கம் இந்தியர்களை கலர் கோடு போட்டு பிரித்தால நாமே வழிவகுத்து கொடுத்து விட்டோம். ஒவ்வொரு மொழியினருக்கும் ஒரு சங்கம் வைத்துக் கொண்டு தனித்தனியே மானியம் வாங்கிக் கொண்டு BN அரசாங்கத்துக்கு ஒட்டு போட்டோம் அல்லவா, அதை வாங்கிக் கொண்டு இன்று நமக்கு அறிவுரை கூறுகின்றான் அந்த அம்னோகாரன். மானியம் பெற்றுக் கொண்டதோட சரி. எவன் எவன் எவனுக்கு ஒட்டு போட்டான் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.இந்த ஜென்மத்தில் இவர்கள் ஒன்று சேரப் போவதில்லை. வேண்டாம் இந்த தீராத விளையாட்டு.