“சீனர்களுக்கு மேலும் என்ன தான் வேண்டும் ?” என்ற உத்துசான் மலேசியா தலைப்புச் செய்தி மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்காததைத் தற்காத்துப் பேசியுள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதினை பிகேஆர் தொடர்பு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் சாடியுள்ளார்.
கைரி சொல்லும் வாதம் ‘அறிவுக்கு ஒப்பாதது’ என நிக் நஸ்மி சொன்னார்.
நஜிப் தலைவராக இருக்கும் அம்னோவுக்கு அந்த ஏடு சொந்தமானது என்பதே அதற்கு காரணமாகும். உத்துசான் மலேசியா தனது ‘பழைய இனவாத, மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் வியூகத்தை கை விட்டு ஒரே மலேசியா செய்தியை வலியுறுத்துமாறு’ பிரதமர் உத்தரவிட முடியும் என்றார் அவர்.
கைரி இப்போது அமைச்சராக இருப்பதால் மாற்றுக் கருத்தைச் சொல்வதற்கு சிரமமாக இருக்கலாம் என்றும் ஆனால் அதற்கான பதிலை உலகம் அறியும் என்றும் நஸ்மி சொன்னார்.
மே 5 தேர்தலில் பிஎன் -னுக்கு கிடைத்த அடைவு நிலைக்கு ‘சீனர் சுனாமி’
காரணம் என நஜிப் சொன்னதைத் தொடர்ந்து ‘Apa lagi Cina mahu?’ என்ற
தலைப்பில் முதல் பக்கச் செய்தியை உத்துசான் வெளியிட்டது.
ஆளும் கட்சிக்கு எதிராக சீன வாக்காளர்கள் வாக்களித்தது குறித்த நஜிப்பின் வெறும் கண்ணோட்டமே ‘சீனர் சுனாமி’ என கைரி சொனார். பிரதமர் இன்னும் ஒரே மலேசியா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட்டார்.
உங்களுடைய ஒரே மலேசியா கொள்கையைத்தான் நாங்கள் தினமும் பார்த்துக்கொண்டிருக்குமே… பள்ளியில் மிக சிறந்த மதிப்பெண்களை பெற்ற இந்திய மாணவிக்கு கிளந்தானில் கால்நடை மருத்துவம் படிக்க அனுப்புகிறார்கள்….. சிறு வயது முதல் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற அந்த மாணவியின் கனவில் மண்ணை அள்ளி போடுவதே உங்கள் ஒரே மலேசியா கொள்கைதானே….