நாடு முழுவதும் இந்த வார இறுதியில் சினிமா அரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் கூறியிருக்கிறார்.
“நாங்கள் முதலில் பார்ப்போம். நாங்கள் கருத்துக்களைத் திரட்டுவோம். எல்லா சினிமா அரங்குகளிலும் எங்கள் ஆட்கள் உள்ளனர்,” என அவர் தமது அமைச்சில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
“ஏன் சிலர் மரியாதை தெரிவிக்கவில்லை என்பதை நாங்கள் அறிய
விரும்புகிறோம். அவர்களுக்கு அது பற்றி தெரியாதா ? தேசிய கீதமே காரணமா ? நாங்கள் காரணங்களைத் திரட்டுவோம்,” என்றார் அவர்.
திரட்டப்படும் கருத்துக்களைக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான தேசிய நாள் கொண்டாட்டங்களை அமைச்சு தயாரிக்கும். தேசிய நாள், மலேசிய தினக் கொண்டாட்டங்களை கவனிப்பதற்கு நிரந்தரச் செயலகம் அமைக்கப்படும் என்றும் சாப்ரி தெரிவித்தார்.
மரியாதையை என்பது தானாக வர வேண்டும்….. அதற்கு சிறு வயது முதல் தொடங்கும் அடிப்படை கல்வி முறையை மற்ற வேண்டும்…. அதை விடுத்து வீணே மக்கள் பணத்தை இப்படி தேவை இல்லாத ஆய்வுகளுக்கு பயன் படுத்த கூடாது. அரசாங்கத்தில் வெட்டியாய் இருக்கும் உழியர்களுக்கு என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் இருகிறார்கள் போலும்…
தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைகளே.
இந்த தேசமும் தேச கொடியும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது . இனம் ,மதம் , அரசியல் கட்சிகள் , சமூக இயக்கங்கள் , அத்தனைக்கும் மேலானது . இது என் தேசம் , என் தேசத்து கொடியென்ற பற்று மனதில் ஆழ பதிந்து இருக்கவேண்டும் . ஒரு தாய்க்கும்-பிள்ளைக்கும் உள்ள உறவு போல நாம் பிறந்த இந்த மண்ணில் மீதும் இந்த மண்ணுக்கு அடையாளமான தேசிய கொடியின் மீதும் பற்றுதல் உடையவர்களாக இருப்போமாக. அரசியல் கூத்தாடிகள் மேல் உள்ள வெறுப்பால் நாட்டு பற்று குறைந்துவிட கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்!
Dark Justice நீங்கள் சொன்னது 100% உண்மை
S .S RAJULLA சொல்லுவது
உண்மைதான் ஆனால் சில நேரங்களில்
அவாகள் நாம் இனத்தை அவமதிப்பது
.கண்டு நாமும்
இந்த பூமிதான் பிறந்தோமா என்று சந்தேகமாக இருக்கு?
நம் நாட்டில் மலாய்க்காரர்களுக்கு ஒரு சட்டம், மலாய்க்காரர்கள் அல்லாதவருக்கு ஒரு சட்டம் என்பன போன்ற விஷயங்கள் எப்பொழுது குப்பைக்கு போகிறதோ, அப்போது தேசப்பற்று என்பது தானாகவே வந்துவிடும்.