‘மெட்ராஸ் கஃபே’ திரையிட தடை

madras cafe bannedஇலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடும்முன் சமூக இயக்கங்களுடன் கலந்து பேசு வேண்டும் என உள்துறை அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 

இது சார்பாக சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர், கா. ஆறுமுகம் இந்தப்படம் சார்பாக தமிழர்கள் இடையே பலத்த கண்டணம் எழுந்துள்ளது, எனவே அந்தப்படத்தை திரையிடும்முன் மலேசியாவில் உள்ள சமூக இயக்கங்களிடம் காட்டுவது முரண்பாடுகளை தவிர்க்கும் என்று கோரும் கடிதம் ஒன்றை உள்துறை அமைச்சுக்கு அனுப்பி இருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை அந்தப்படத்தை முழுமையாக பார்க்க சில கல்விமான்களும் காவல் துறையினரும் உள்துறை அமைச்சிக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் கணிப்பின் படி அந்தப்படம் ஒரு முழுமையான பிண்ணனியை வழங்கவில்லை, அது ஒரு பொழுது போக்கு என்ற வகையில் கூட வெளியிடும் தகுதியை இழந்து விட்டதாகவும், குறிப்பாக அதிகமான தமிழர்களர் வாழும் மலேசியாவில் அது திரையிடப்படுவது உகந்தது அல்ல எனப்பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதை ஏற்றுக்கொண்ட அமைச்சின் அதிகாரிகள் அந்தப் படத்திற்கு தடை விதிக்க போவதாக முடிவு செய்துள்ளனர். இருப்பினும் அந்தப்படத்தின் விநியோகஸ்தர் தடைக்கு எதிராக மனு செய்ய சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.