போலீசிடமுள்ள குறிப்புகளின் அடிப்படையில் பார்த்தால்,, அவசரகாலச் சட்டவிதிகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டமும் அகற்றப்பட்டதிலிருந்து துப்பாக்கி பயன்படுத்திச் செய்யப்பட்ட கொலைகளும் கொலைமுயற்சிகளும் அதிகரித்துள்ளது.
அவை அகற்றப்படுவதற்கு முந்திய 18 மாதங்களில்- ஜூன் 21, 2010இலிருந்து 21, டிசம்பர் 2011வரை- சுடும் ஆயுதங்களால் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 57.
ஆனால், அவை அகற்றப்பட்ட 18 மாதங்களில்- டிசம்பர் 22, 2011இலிருந்து ஜூன் 26, 2013வரை- துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 116 ஆகக் கூடியிருக்கிறது.
குறிப்பிட்ட அக்காலத்தில் பொதுவில் குற்றங்கள் குறைந்தன என்றாலும், வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்ததாக போலீஸ் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அல்தாந்துயாவை வெடி வைத்து கொன்றவர்களும், அதற்கு பின்னணியில் இருந்தவர்களும், விடுதலையாகியும், சட்டமும் நீதியும் அந்த கொலைக்காரர்களை ஒன்றும் செய்ய இயலா பட்சத்தில், நம் நாட்டில் குற்றச்செயல்கள் இன்னும் மோசமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சிங்கம் அல்தான்துயாவை விட மாட்டார் போலிருக்கிறது.