அரசாங்கம் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் 4 விழுக்காட்டு விற்பனை வரியைச் சேர்க்கக்கூடும். ரிம 14.9 பில்லியனாகக் கூடியுள்ள நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட விற்பனை வரி கொண்டுவரப்படலாம் என உள்ளூர் செய்தித்தாளான மலேசியன் ரிசர்வ் கூறியுள்ளது.
நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா, நாட்டின் நிதிநிலையை வலுப்படுத்த பல பொருளாதாரச் சீரமைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறியிருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
“அது (ஜிஎஸ்டி) பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. பட்ஜெட் வரை காத்திருப்போமே”, என்றவர் கூறினார்.
– Reuters