தண்டா புத்ராவைத் திரையிட வேண்டாம் என பினாங்கு சினிமா அரங்குகளை கேட்டுக் கொள்கின்றது

tandaநாடு முழுவதும் நாளை திரையிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தண்டா  புத்ரா’ படத்தை திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில அரசாங்கம்  மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஊராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சாவ்  கோ இயாவ் அதனைத் தெரிவித்தார்.

சினிமா அனுமதிகள் ஊராட்சி மன்றங்களின் கீழ் வருவதாக அவர் சொன்னார். “திரைப்படத்தின் உள்ளடக்கம் மீது எங்களுக்கு அதிகாரம் இல்லை. அது மலேசிய  தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (பினாஸ்) உரிமையாகும்.”

“என்றாலும் அந்தத் திரைப்படம் உணர்ச்சியைத் தூண்டும் அம்சங்களை
கொண்டிருப்பதால் அதனை திரையிடாமல் இருப்பதின் மூலம் ஒத்துழைக்குமாறு  சினிமா அரங்குகளுக்குக் கடிதம் எழுதுமாறு நாங்கள் இரண்டு ஊராட்சி  மன்றங்களுக்கும் (பினாங்கு, செபராங் பிராய்) உத்தரவிட்டுள்ளோம்,” என சாவ்  நிருபர்களிடம் தெரிவித்தார்.