‘விமானத்தில் பன்றி இறைச்சி’ என்ற வலைப்பதிவுக்காக ஜைனுடின் மீண்டும் மன்னிப்புக் கேட்கிறார்

air asiaமுன்னாள் தகவல் அமைச்சரும் மூத்த பத்திரிக்கையாளருமான ஜைனுடின் மைடின்,  தமக்கு எதிராக 5 மில்லியன் ரிங்கிட் வழக்கை தொடருவதை ஏர் ஏசியா நிறுத்திக்  கொள்ளும் என்றால் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து மன்னிப்புக் கேட்கத்  தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

ஏர் ஏசியா விமான நிறுவனம் தனது பயணங்களில் பன்றி இறைச்சியை
வழங்குவதாக அவர் தமது வலைப்பதிவில் கூறிக் கொண்டதை ஏர் ஏசியாவும் ஏர்  ஏசியா x-ம் மறுத்துள்ளன.

‘Hidangan babi dalam penerbangan AirAsia, orang Islam patut tangguhkan dulu
terbang dengan pesawat ini” (ஏர் ஏசியாவில் பன்றி இறைச்சி வழங்கப்படுகின்றது.  முஸ்லிம்கள் அந்த விமான நிறுவனத்தில் பயணம் செய்வதைத் தள்ளி வைக்க  வேண்டும்) என ஜாம் என்றும் அழைக்கப்படும் ஜைனுடின் அந்த வலைப்பதிவில்
குறிப்பிட்டிருந்தார்.air asia

அதற்காக அவர் ஆகஸ்ட் 25ம் தேதி தமது வலைப்பதிவில் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

தாம் இப்போது ஒய்வூதியத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஐந்து மில்லியன்  ரிங்கிட்டைக் கொடுக்கும் சக்தி இல்லை என்றும் ஜைனுடின் அதில் எழுதியுள்ளார்.

“ஆறு மாதங்களுக்கு நான் மன்னிப்புக் கோருவதை வெளியிட வேண்டும் என ஏர்  ஏசியா கோரியுள்ளது. ஆனால் எதிர்காலத் தலைமுறையினரும் பரவ வேண்டும்  என்பதற்காக நான் பல ஆண்டுகளுக்கு அதனை வெளியிடுகிறேன்,” என்றார்  அவர்.

ஜுலை முதல் தேதி பதிவில் ஜைனுடின் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

 

TAGS: