திரை அரங்குகளில் திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்னர் தேசிய கீதத்தை இசைக்கும் ஏற்பாடு இன்று முதல் நடப்புக்கு வருகின்றது.
ஆனால் கோலாலம்பூரில் உள்ள ஒரு சினிமா அரங்கில் அது இன்று காலை அமலாக்கப்படவில்லை.
மிட் வேலி மெகா மால் கடைத் தொகுதியில் உள்ள Golden Screen சினிமா
அரங்கில் திரயிடப்பட்ட ‘எலிசியஸ்’ என்னும் திரைப்படத்தைக் காண
மலேசியாகினி நிருபர்கள் இன்று காலை மணி 11.20க்குச் சென்றனர்
திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்னர் நெகாராகூ இசைக்கப்படாததை அவர்கள் கண்டனர்.
ஆகஸ்ட் 31 தேசிய தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை எல்லா திரையரங்குகளிலும் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்படும் என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் கடந்த வாரம் அறிவித்தார்.
தேசியப் பாடலும் இப்பொழுது அரசியல் சரக்காகி விட்டது! ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் அரசியல் போதையில் மூழ்கி இருப்பதால், இன்னும் வரும் ஏராளமான சர்ச்சைகள். காத்திருப்போம்.
நாட்டு பற்றை இப்படியெல்லாம் வெளிபடுட்தலாமா?
நம் தேசியகீதம் நல்லாத்தான் இருந்தது . ஆனா கோயா குட்டி காகாவுக்கு பிடிக்கல. இது என்ன ஆமா வேகதல இருக்கு.. குதிர வேகதல பாடுங்கடா என்று தேசிய கீத இசையை வேகமாக மாற்றினான் , பிடிச்சது சனியன் ! பிறகு மீண்டும் பழைய முறைகே மாற்றினார்கள் . இப்படிபட்ட குளறுபடியாலேயே பல பேருக்கு தேசியகீதம் மறந்து போச்சு .
நாட்டுப் பற்றுக்கு இது ரொம்ப தேவை !! நேற்று ஒருத்தர் நெகரா கூ தியேட்டர்ல போடும்பொழுது , அவரின் வாயிலே சோளப் பொறி!!! பிள்ளை வாயிலே பேர்கர்..தேசப் பற்றை பார்த்து மெய் சிலிர்த்துப் போனேன் போங்க !!!