போலீசார் மேற்கொண்ட Ops Cantas நடவடிக்கை வெற்றி என தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) பாக்ரி ஜினின் பிரகடனம் செய்துள்ளார்.
ஆனால் அவர் புள்ளி விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
“Ops Cantas நடவடிக்கை பலனளித்துள்ளது. வன்முறைக் குற்றங்கள்
குறைகின்றன,” என வெற்றி என துணை ஐஜிபி இன்று சைபர் ஜெயாவில்
நிருபர்களிடம் கூறினார்.
“நிலைமை தங்கள் கட்டுக்குள்” இருப்பதாக போலீஸ் படை மனநிறைவு கொள்ளும் வரை Ops Cantas நடவடிக்கை கால வரம்பின்றி தொடரும்,” என்றும் அவர் சொன்னார்.
“ஆனால் என்னிடம் எந்த புள்ளி விவரமும் இல்லை,” என பாக்ரி தெரிவித்தார்.
ஐயா, இன்னும் தாங்கள் பாதி தூரம் கூட கடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். தற்போதைய உங்களின் நடவடிக்கையால் சிறிது பதுங்கி இருகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று இறுமாந்து இருந்துவிடாதீர்கள். உங்கள் நடவடிக்கை தளர்ந்தால் அவர்கள் மீண்டும் தலை விரித்து ஆடுவார்கள். முற்றாக அவர்களை அடக்கும் வரையில் தயவு செய்து உங்கள் நடவடிக்கையை நிறுத்திவிடாதீர்கள். சிலாங்கூர் மாநில உயர் போலிஸ் அதிகாரி ஐயா தெய்வீகன் கூறியது போல இந்த சமூதாய புல்லுரிவிகளை முற்றாக அழித்து அவர்களும் தத்தம் தவறினை உணர்ந்து சமூதாயத்தோடு இணைந்து வாழ சமூதாயமும் தயாராக இருந்து ஆவன செய்ய வேண்டும். இந்த அநீத செயல்களில் ஈடுபடவும் கண்டிப்பாக அறிவு திறன் வேண்டும். யார் வேண்டுமானாலும் இதனில் ஈடுபட முடியாது. அதற்கும் சில திறமைகள் வேண்டும். அதே திறமையை இவ்வாறு அழிவு செயலில் வீணடிக்காமல் ஆக்ககரமான மற்றும் சமூக நலனுக்கும் பயன்படுத்தினால் சமூகம் மட்டும் அல்ல சம்பந்தப்பட்ட அனைவரும் பயனடையலாம். நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல் படுவோம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
நாலு பேரை சுட்டு தள்ளிவிட்டால் வெற்றியா ? போலிஸ்காரனே சங்கலியை அறுக்கிறான் ,போலிஸ் என்ன செய்ய போகுது ? கெலனா ஜெயா PJவில் நடந்த சம்பவம் !
கடந்த 25/8/13 என் நண்பரின் மகன் அதிகாலை வேளைக்கு செல்லும்பொழுது மோட்டார்சைக்கிள் பழுதாகிவிட்டது. பையன் மொடோர்சைக்களை தள்ளிக்கொண்டு நடந்தான். அப்பொழுது ஒரு போலீஸ் ரோந்துக்கார் மற்றொரு மொடோர்சைக்கிளை துரத்தி வந்தது, அனால் அந்த மொடோர்சைக்கில் தலைமறைவாகிவிட்டது.
போலீஸ் ரோந்துக்கார் என் நண்பரின் மகனை நிறுத்தி தடியால் அடித்துவிட்டு (சாலா ஓரங்) என்று சொல்லி விட்டு விட்டார்கள். இதுதாண்ட நம்ம போலீஸ். போலிஸ் சேவையை மதிப்போம்.