ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சில திட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும். அரசாங்கத்தின் நிதிநிலையைச் சீர்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் திங்கள்கிழமை கூடும் நிதியியல் கொள்கைக் குழு அதன்மீது முடிவெடுக்கும் என்றும் 2014 பட்ஜெட்டில் அது பற்றி அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இன்றைய த ஸ்டார் நாளேடும், “பொது நிதிக்குப் பெரும் சுமையாக விளங்கக்கூடிய திட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும்”, என இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி முகம்மட் ஹனட்ஸ்லாவை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.
மறு ஆய்வு செய்யப்படும். அதே சமயத்தில் பூமிப்புத்ரா அரசியல்வாதிகளை கோடீசுவரராக்கும் திட்டம் கைவிடப்பாடது!