மெர்டேகாவைக் கருப்பொருளாகக் கொண்ட “MERdEKAnya KITA” என்னும் நாடகம் “உள்ளூர் மக்களை ஆத்திரப்பட வைக்கும்” என்பதால் அது “தேசியப் பாதுகாப்புக்கு ஒரு மருட்டல்” என்றுகூறி அரசாங்கம் அதற்குத் தடை விதித்துள்ளது.
அந்நாடகம் இன இணக்கத்தைக் கெடுப்பதுபோலவும் சிங்கப்பூரர்கள் மலேசியர்களைச் “சிறுமைப்படுத்துவதுபோலும்” உள்ளது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சு அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் நாடகக் குழுவான ரூமா அனாக் தியேட்டரின் (RAT) பேச்சாளர் பைசல் முஸ்தபா கூறினார்.
அத்தடைக்கு எதிராக RAT முறையீடு செய்யும் என்றாரவர். சிங்கப்பூர் நாடகக் குழுவான தியேட்டர் காமி தயாரித்துள்ள அந்நாடகம் இன்றிரவு அரங்கேற விருந்தது.