நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அமலாக்குவது அவசியமாகும். அது ஒரு தேர்வு அல்ல என நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகமட் இர்வான் சிரிஹார் அப்துல்லா கூறுகிறார்.
நாட்டைப் பாதுகாப்பதே அதன் முழுமையான நோக்கம் என வருணித்த அவர், நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு வரும் அக்டோபர் வரவு செலவுத் திட்டத்தில் அதனை இணைக்க அமைச்சு எல்லா முயற்சிகளையும் செய்யும் என்றார் அவர்.
ஜிஎஸ்டி மக்களுக்குச் சுமையை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய
தனிநபர்களுக்கு சிறிய நடுத்தரத் தொழில்களுக்கும் கழிவு கொடுக்கப்படும் என்றும் இர்வான் தெரிவித்தார்.
“அரிசி, பால் போன்ற இன்றியமையாத பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.”
ஜிஎஸ்டி ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை அமலாக்க 14 மாதங்கள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
“நிதிக் குழு திங்கட்கிழமை கூடிய பின்னர் மேல் விவரங்கள் அறிவிக்கப்படும்,” என இர்வான் பங்குப் பத்திர ஆணையத்தில் பொருளாதார உருமாற்றத் திட்டம் பற்றிய விளக்கமளிப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.