2014 வரவு செலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டி சேர்க்கப்பவது பற்றி நஜிப் மௌனம்

najibஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவிப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமலாக்குவது மீது ஏதும் சொல்ல மறுக்கிறார்.

“ஜிஎஸ்டி என்பது புதிய விஷயமல்ல. நாங்கள் அது பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். அது வரவு செலவுத் திட்டத்தில் இருக்குமா இருக்காதா என்பதை அறிந்து கொள்ள நீங்கள் வரவு செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டும்,” என அவர் இன்று தமது அலுவலகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் தாம் சமர்பிக்கும் 2014 வரவு செலவுத் திட்டத்தில் 4 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நஜிப் அறிமுகம் செய்யக் கூடும் என்ற ஊகங்கள் பரவலாக  எழுந்துள்ளன.

என்றாலும் நஜிப் சர்ச்சைக்குரிய அந்த வரி அமலாக்கப்படும் என்பதை
உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

 

TAGS: