உள்துறை அமைச்சு 49 சட்டவிரோத குண்டர் கும்பல்கள் மீது போர் பிரகடனம்

gang1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமானவை என 49  குண்டர் கும்பல்கள் மீது உள்துறை அமைச்சு போர் பிரகடனம் செய்துள்ளது.

அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளின் தொடக்கம் அது எனக்
கருதப்படுகின்றது.

அது வெளியிட்டுள்ள பட்டியலில் கோலாலம்பூரிலும் ஜோகூரிலும் செயல்படும்  மிகவும் தீவிரமான குண்டர் கும்பல்களும் அடங்கும் என அமைச்சு விடுத்த  அறிக்கை தெரிவித்தது.

“நாடு முழுவதும் 49 ரகசியக் கும்பல்கள் 1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின்  பிரிவு 5(1)ஐ மீறியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஆகஸ்ட் 28ம் தேதி  அறிவித்துள்ளார்.”

“அந்த ரகசியக் கும்பல்கள் (pertubuhan-pertubuhan kongsi gelap) போதைப்
பொருள் விநியோகம், பணம் பறித்தல், குண்டர் கும்பல் மோதல்கள், கலவரத்தை  ஏற்படுத்துவது, சுடும் ஆயுதங்கள் அல்லது பாராங்கத்திகள், கத்திகள்  போன்றவற்றைப் பயன்படுத்தி கொலை செய்வது போன்ற நாட்டின் அமைதிக்கு  மருட்டலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன,” என்றும் அந்த  அறிக்கை தெரிவித்தது.

அந்த அமைப்புக்களின் கணக்குகளை பறிமுதல் செய்வதும் திவால் துறை  அவற்றின் சொத்துக்களை கலைப்பதும் அமைச்சு எடுக்கவிருக்கும்  நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் அது கூறியது.

 

TAGS: