தண்டா புத்ரா திரைப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்னும் திட்டத்தின் கீழ் வருவதால் அதனை திரையிடாத சினிமா அரங்குகள் தங்கள் உரிமங்களை இழக்க வேண்டியிருக்கும் என அதன் இயக்குநர் ஷுஹாய்மி பாபா சொல்கிறார்.
“பினாஸ் எனப்படும் தேசியத் திரைப்படக் கழகத்தின் அனுமதி இல்லாமல் சினிமா அரங்குகள் திரையிடுவதை ரத்துச் செய்தால் அவற்றின் அனுமதிகள் ரத்துச் செய்யப்படலாம்,” என அவர் சொன்னதாக் ஸ்டார் நாளேட்டின் மலாய் செய்தி
இணையத் தளமான mStar Online செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தத் திரைப்படம் வரலாற்றை சிதைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்ளும் அந்தப் படத்தை திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில அரசாங்கம் மாநிலத்தில் உள்ள திரையரங்குகளை கேட்டுக் கொண்டுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.
எப்படியோ,இனங்களுக்கிடையே வெறுப்புணர்ச்சிகளை தூண்டிவிட அம்னோ தயாரிகிவிட்டதையே இது காட்டுகிறது
தியேட்டர்களில் படம் வெளியிடுவதும் முடியாததும் தியேட்டர் உரிமையாளருக்கு இல்லாயா
சர்வ அதிகாரம் கையில் இருந்தால்….., பயமுறுத்தலை பல ரூபங்களில் அனுப்பலாம்….!