ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூட சம்பவம் ‘சிறிய பிரச்னையே’

kamalanathanஉடைமாற்றும் அறையில் மாணவர்கள் உட்கொள்ளுமாறு செய்யப்பட்ட ஸ்ரீ  பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூட சம்பவம் மாணவர்களை நன்றாக  ஒருங்கிணைத்துள்ள மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் ‘சிறிய பிரச்னையே’  என்று இரண்டாவது கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன் சொல்கிறார்.

“நேற்று வரை இந்த நாட்டில் 10,904 பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன. தேசிய  ஒருங்கிணைப்புக்கு 90 முதல் 95 விழுக்காடு வரையிலான பள்ளிகள் நல்ல  முறையில் பங்காற்றியுள்ளன.”

“இங்கு ஒரு பள்ளிக்கூடம், ஒருவர் கொள்கையைப் பின்பற்றவில்லை. முழுக் கல்வி  முறையும் அப்படிப்பட்டது என நாம் சொல்லக் கூடாது,” என்றார் கமலநாதன்.

அந்தச் சம்பவம் தொடர்பில் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் முகமட் நாசிர்  முகமட் நோர் மீது கொடுக்கப்பட்டுள்ள பல புகார்களை கல்வி அமைச்சின்  ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு விசாரிப்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் அதன்  முடிவுகள் அவருக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

‘கல்வி சமப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா’ என்னும் தலைப்பில்  கோலாலம்பூரில் நிகழும் கருத்தரங்கு ஒன்றில் கமலநாதன் பேசினார். ஸ்ரீ  பிரிஸ்டினா சம்பவம் பற்றிக் கருத்துக் கூறுமாறு கருத்தரங்கு அனுசரணையாளர்  நூர் அஸிமா அப்துல் ரஹிம் கேட்டுக் கொண்ட போது கமலநாதன் அவ்வாறு  பதில் அளித்தார்.