பினாங்கில் தண்டா புத்ராவை திரையிடுமாறு பினாஸ் ஆணையிடும்

tanda‘தண்டா புத்ரா’ திரைப்படம் உணர்வுகளைத் தூண்டும் தன்மையைக்  கொண்டிருப்பதால் அதனைத் திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில  அரசாங்கம் கூறியுள்ள ஆலோசனைக்கு அங்குள்ள சினிமா அரங்குகள்  கட்டுப்பட்டுள்ள போதிலும் அதனை அவை திரையிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

சர்ச்சையை உருவாக்கியுள்ள அந்தத் திரைப்படம் சனிக்கிழமை பினாங்கு  தியேட்டர்களில் காட்டப்படும் என தொடர்பு பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி  சிக் கூறினார்.tanda1

அந்தத் திரைப்படம் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன், துணைப் பிரதமர்  டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் ஆகியோரது வாழ்க்கையையும் மே 13  இனக் கலவரத்தைச் சூழ்ந்துள்ள வரலாற்று நிலவரங்களையும் சித்தரிப்பதாக  கூறப்பட்டுள்ளது.

பினாங்கில் திட்டமிட்டபடி தண்டா புத்ரா காட்டப்படுவதை உறுதி செய்யுமாறு  மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துக்கு (பினாஸ்)  ஆணையிடப்பட்டுள்ளதாக அகமட் சாப்ரி தமது அண்மைய முகநூல் பதிவில்  எழுதியுள்ளார்.