நாட்டுக்கு மலேசியர்கள் ‘புது வேகத்தை’ கொடுக்க புதிய சமூக ஒப்பந்தம் வரையப்பட வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் யோசனை கூறியிருக்கிறார்.
“அத்தகைய நடவடிக்கை மலேசியர்கள் தங்கள் ஐக்கியத்திற்கு புதிய அடித்தளம் அமைக்க உதவும். அத்துடன் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் சவால்களைப் பிரதிபலிப்பதாகவும் அது இருக்கும்.”
“நான் அரசமைப்புத் திருத்தங்களை வலியுறுத்தவில்லை. மாறாக நமது சமூக ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து மீண்டும் எழுத வேண்டும்,” என்றார் அவர்.
கைரி “ஒற்றுமை பல பண்பாடு: ஒன்றாக எதிர்காலத்தை நிர்மாணிப்பது என்னும் தலைப்பில் ஆசிய வியூக தலைமைத்துவ ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நேற்று பேசினார்.
இருக்கின்ற சமூக ஒப்பந்தம் என்னா ஆச்சாம்? இருக்கின்றதே ஒழுங்கா வெச்சி குடுத்தனம் நடத்த முடியல. இதுல வேற புது ஒப்பந்தமா? இருக்கின்றதையும் குறைச்சி எங்களை ஓட்டாண்டி ஆக்குரததுக்கா புது ஒப்பந்தம். போங்கடா போக்கதவங்களா?
கண்டிப்பாக ஒப்பந்தம் தேவை ! இனவாதம் பேசும்,தூண்டிவிடும் அரசியல் மடையர்களை செருப்பால் அடிக்கும் ஒரு ஒப்பந்தம் தேவை ! ஐக்கியம் தானாக வந்துவிடும் !
ஆமா வேகம் பட்லன இன்னும் 2 நிர்முல்கி கப்பல்
4 ஜெட் விமானம் வாங்கிவிடுங்க எல்லாம்
சரியாகிவிடும் .