குண்டர் கும்பல்களில் அபாயமிக்கவை இந்தியர்களைக் கொண்ட 04, 08 கும்பல்களே

நாட்டில்  செயல்பட்டு வரும் இரகசிய குண்டர் கும்பல்கள் பற்றிய விவரங்களை உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்டது.

49 குண்டர் கும்பல்கள் செயல்பட்டு வந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள், ரவுடித்தனத்தில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்தியர்களைக் கொண்ட 04, 08 கேங்குகளே என்கிறார் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் முகம்மட் ரட்சி.

04,  கெடா, பினாங்கு, ஜோகூர், கோலாலும்பூர் ஆகிய இடங்களில் 5,440 உறுப்பினர்களைக் கொண்டு போதைப் பொருள் கடத்தல், கடன் செலுத்தப்படாத கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளுதல், பவுன்சர்கள், பாதுகாப்புப் பணம் வசூலிப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கிறது.

1970-களில் உருவான 08-இல் 5,440 உறுப்பினர்கள் உள்ளனர். கோலாலும்பூர், சிலாங்கூர், பினாங்கு, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் அது இயங்கி வருகிறது.