பிகேஆர்: தண்டா புத்ரா அறிவுரை நினைவூட்டலே

tanda‘தண்டா புத்ரா’ திரைப்படத்தை திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில  அரசாங்கம் சினிமா அரங்குகளுக்குத் தெரிவித்துள்ள ‘ஆலோசனை’ அந்தத்  திரைப்படத்தின் உள்ளடக்கம் பற்றி மக்களுக்கு நினைவூட்டலாகும் என  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார்.

“மக்களுக்கு நினைவூட்டப்படுவது அவசியமாகும். அந்தத் திரைப்படம் வரலாற்று  ஆவணம் என வலியுறுத்தப்படுகின்றது. அது கற்பனை என்றால் அதனைச்  சொல்லி விடுங்கள்,” என அவர் பிகேஆர் தலைமையகத்தில் மெர்தேக்கா உரையை  நிகழ்த்திய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“அது தடை என்றால் நான் அதனை எதிர்த்திருப்பேன். ஆனால் வெறும்
ஆலோசனை தான்,” என்றார் அவர்.