டிஏபி: கணிதம் அறிவியல் பாடங்களுக்கான மதிப்பெண்கள் ரகசியமா ?

studentsஐந்தாம் படிவ கணிதம், கூடுதல் கணிதம், பௌதிகம், இரசாயனம், ஆங்கிலம்  ஆகிய பாடங்களுக்கான ஐந்தாம் படிவத் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண்களை  (passing marks) தெரிவிக்க கல்வி அமைச்சு மறுப்பதாக சரவாக் எதிர்க்கட்சித்  தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் அந்தத் தகவல் வருவதாக காரணம் காட்டி  அதனைத் தெரிவிக்க மறுப்பதின் மூலம் கல்வி அமைச்சு எதனையோ மறைக்க  முயலுவதாக தெரிகிறது என சரவாக் மாநில டிஏபி தலைவர் சொங் சியங் ஜென்  சொன்னார்.students1

“அந்தப் பாடங்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் என்ன பரம ரகசியமா ? அந்த  மதிப்பெண்களை அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் அமைச்சு வகைப்படுத்தும்  அளவுக்கு அவை நாட்டின் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளனவா ?”  என்றும் அவர் வினவினார்.

“பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை அதிகாரத்துவ ரகசியமாக
வகைப்படுத்துவது எல்லா நியாயத்தையும் மீறுகின்றது என்றும் சொங் சொன்னார்.