மலேசியாவுக்குள் வங்காள தேசத் தொழிலாளர்கள் ‘கொண்டு வரப்படுவதாக’ பிகேஆர் சொல்கிறது

sivarasaகேள்விக்குரிய சுற்றுப்பயண விசாக்களை வழங்குவதின் மூலம் ஆயிரக்கணக்கான வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவுக்குள் கொண்டு வர அரசாங்க அதிகாரிகள் வகுத்துள்ள ஒரு திட்டத்துக்கு உதவியாக கூடுதல் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிகேஆர் கூறிக் கொண்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒரு மாத சுற்றுப்பயண விசா என அழைக்கப்படும் ஆவணத்துடன் ஆயிரம் வங்காள தேசத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு உதவியாக டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகம், பயண முகவர் நிறுவனம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவு அதிகாரிகள் ஆகிய தரப்புக்கள் சந்தேகத்துக்குரிய அந்த நடைமுறைகளை மேற்கொண்டிருக்கக் கூடும் என பிகேஆர் தலைவர் சிவராசா ராசையா கூறிக் கொண்டார்.

இவ்வாண்டு மார்ச் தொடக்கம் டாக்காவிலிருந்து கோலாலம்பூருக்கு ஒரே நாளில் ஆறு நேரடி விமானப் பயணங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த சுபாங்  எம்பி சொன்னார். சுற்றுப்பயண விசாக்களை பெரும் எண்ணிக்கையில்  வழங்கியதின் மூலம் வங்காள தேச நிறுவனம் ஒன்று முக்கியப் பங்காற்றி
வருவதாகவும் அவர் தெரிவித்தார்.