மஇகா தேர்தல்: கவனம் உதவித் தலைவர்கள்மீது திரும்புகிறது

1 micசெப்டம்பர் 1-இல், ஜி.பழனிவேல் போட்டியின்றி மஇகா தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.அதே வேளை, தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என ஒப்புக்கொண்டிருக்கும் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தை எதிர்த்துத் துணைத் தலைவர் பதவிக்கு எவரும் போட்டியிடுவார்களா என்பதும் சந்தேகமே..

அவ்வாறு செய்வது அரசியல் தற்கொலை என்பதை அனவரும் அறிந்தே இருப்பதால் எவரும் அதில் ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்ப்பதற்கில்லை.  .எனவே, இப்போது கவனமெல்லாம் உதவித் தலைவர் பதவியை நோக்கித் திரும்பியுள்ளது.

இன்றைய நிலவரப்படி பார்த்தால் பின்வரும் வேட்பாளர்கள் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் எனத் தெரிகிறது:

1). எம்.சரவணன் (நடப்பு உதவித் தலைவர், துணை அமைச்சர்),

2). எஸ்.கே. தேவமணி (நடப்பு உதவித் தலைவர், பேராக் சட்டமன்றத் தலைவர்),

3). செனட்டர் ஜஸ்பால் சிங் (மஇகா தலைமை பொருளாளர்),

4). எஸ்.ஏ. விக்னேஸ்வரன் (முன்னாள் இளைஞர் தலைவர்)

5).எஸ்.வேள்பாரி (வியூகத் தலைவர், முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலுவின் புதல்வர்),

6).எஸ்.சோதிநாதன் (முன்னாள் உதவித் தலைவர், முன்னாள் துணை அமைச்சர்),

7). டி.மோகன் (நடப்பு இளைஞர் தலைவர்),

8) ரகுமூர்த்தி (கிள்ளான் வணிகர்),

9). பி.கமலநாதன் (துணை அமைச்சர்)