மஇகா இளைஞர் பிரிவு: குண்டர் கும்பல்களை முறியடிப்பதில் அரசாங்கம் இனவாரியான போக்கைப் பின்பற்றுகின்றது

MIC youthநாட்டில் குண்டர் கும்பல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இன வாரியான போக்கை அரசாங்கமும் போலீசும் பின்பற்றுவதாக மஇகா இளைஞர் பிரிவு  இன்று வருணித்துள்ளது.

குண்டர் கும்பல்களில் 28,926 மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக  உள்துறை அமைச்சு கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அந்தப் பிரிவின் செயலாளர் சி சிவராஜா  ஏதாவது செய்யப்பட வேண்டும் என  கூறினார்.

“நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். போலீசாருடன் மஇகா இணைந்து செயல்பட  வேண்டும். நாங்கள் பிரச்னையை மட்டும் தீர்க்க விரும்பவில்லை. தடுப்பு  நடவடிக்கைகளையும் நாங்கள் பரிசீலிக்க வேண்டும்,” என அவர் புக்கிட் அமானில்  இன்று காலை மகஜர் ஒன்றைச் சமர்பித்த பின்னர் தெரிவித்தார்.

“என்றாலும் போலீஸும் அரசாங்கமும் இன வாரியான  தோற்றத்தை கொடுப்பதை நாங்கள்  முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்திய குண்டர்கள் நிறைய  இருந்த போதிலும் அது பொதுவாக எங்களைப் பற்றி மோசமான தோற்றத்தையும்
மோசமான எண்ணத்தையும் கொடுக்கிறது,” என்றும் சிவராஜா சொன்னார்.

“இன அடிப்படையில் சொல்வதின் மூலம் அவை இந்திய மாணவர்கள் மீது  விரிவான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. பள்ளிக்கூட நிலையில்  அவர்களைப் பாதிக்கவும் போகின்றது,” என்றார் அவர்.