‘சிறிய விவகாரம்’என்ற கமலநாதனுக்குக் கடுமையான கண்டனம்

m-kulasegaranஎஸ்கே பிரிஸ்தானா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சிறுமைப்படுத்தியதாக கல்வி துணை அமைச்சர் பி,கமலநாதானை டிஏபி உதவித் தலைவர் குலசேகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

கமலநாதன் அதனைச் “சின்ன விசயம்” என்று வியாழக்கிழமை குறிப்பிட்டது அதற்குமுன்னர் அவர் கொண்டிருந்த நிலைபாட்டுக்கு முரணாக உள்ளது என்று ஈப்போ பாராட் எம்பியுமான குலசேகரன் கூறினார்.

“அவ்விவகாரம் முதலில் தெரிய வந்தபோது தலைமையாசிரியருக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட கமலநாதன் அவ்விவகாரம் மீது மக்களின் ஆத்திரம் பெருகியுள்ள நிலையில் அதை விசாரித்தறிவதில் மெதுவாக செயல்படுவது ஏன்?”, என்றவர் வினவினார்.

அவ்விவகாரம் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கமலநாதனும் கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசினும் பதவியில் இருக்கவே தகுதியற்றவர்கள் என்றவர் குறிப்பிட்டார்.