மலேசியாவின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்காது என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார்.
காரணம் ‘நாட்டில் தீவிரவாதப் போக்கும் இனவாதப் பிளவுகளும்’ தொடருவதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.
மலேசியர்கள் இன்று மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடும் வேளையில் விடுத்துள்ள உரையில் லிம் அவ்வாறு கூறியிருக்கிறார்.
பொது நம்பிக்கை சம்பந்தப்பட்ட வேலைகளை தூய்மையான, விவேகமான, ஆற்றலுடைய மக்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய கூட்டரசு அரசாங்கம் வெளிப்படையான பொறுப்பான நிர்வாக முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
பல்வகைத்தன்மையை கொண்டாடுவதின் மூலம் பள்ளிக்கூடங்கள் இனப் பிரிவினையையும் சர்ச்சைகளையும் உருவாக்கும் மய்யங்களாக விளங்குவதற்குப் பதில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் மய்யங்களாக திகழச் செய்ய முடியும் என்றும் லிம் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் நடக்கும் இனவாத அடிப்படையிலான அரசுக்கு கதை வசனம் மற்றும் தயாரிக்கும் அம்னோ மாறவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும்.
இதற்கு காரணம் C4
பள்ளிகள் இன ஒட்றுமையை வளர்க்கும் இடமாக மாற வேண்டும்.இன்று பள்ளிகளில் வகுப்பறை முதல் விளையாட்டு வரை நம் பிள்ளைகள் ஒதுக்கப்படுகின்றனர் .இப்படி ஒதுக்கி ஒதுக்கி தான் நம் மாணவர்களை சீர்கெட்டவலியில் செல்ல தூண்டி விட்டு இன்று சுட்டும் கொள்கின்றனர் .என்ன கொடுமை சார்