கோலாலம்பூர், ஜாலான் பி.ரமலியில் அமைந்துள்ள ஓர் இந்து கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆரின் எஸ். ஜெயதாஸ் மற்றும் கோயில் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள அவ்விருவரும் தற்போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகர் ஆட்சி மன்ற ஊழியர்களால் ஜாலான் பி ரமலியில் அமைந்துள்ள தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைத் தடுக்கும் முயற்சியில் அவ்விருவரும் ஈடுபட்டனர்.
“இப்போது பெரும் குழப்பமாக இருக்கிறது” என்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு பெரும் கூச்சல் சத்தம் கேட்டது.
ஆரமிசிட்டானுங்க்கடா ,கோவில் உடைப்பு திட்டத்தை ,,நாசமாபோனவணுங்க இந்த அரசாங்கம்
கொஞ்சம் நாள் கோயில் உடைப்பு நிறுத்தி விட்டாங்க. மறுபடியும் நினைத்த மாதிரி aarambitu விட்டார்கள். இந்த மாநகர் மன்றம். சபாஸ்.
பதிவு செய்யப்பட்ட கோவிலா என்று அறிவிக்கப்படவில்லை…இருப்பினும் 100 ஆண்டுகளுக்கு மேல் அமைக்கப்பட்ட கோவில் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று.
நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதா???
இல்லையேல் கோலாலம்பூர் மாநகர் ஆட்சி மன்றத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
கோயில் உடைபடும்போது பெரும்பாலும் எதிர்கட்சி இந்திய தலைவர்களே இந்தியர்களுக்காக முன்வருகின்றனர்களே தவிர
ம இ கா தலைவர்களின் மூச்சி காற்றுகூட உணரமுடியவில்லையே!!!!
நமது சமுதாயத்தின் குரல் என்று மார்த்தட்டிக்கொள்வதில் பெருமை அல்ல. உண்மையிலேயே சமுதாயத்தின் உரிமைக்குரலாக விளங்க வேண்டும்.
இந்திய மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர்…
இந்தியன் என்ற போர்வையில், அரசியல் வேற்றுமை பாராமல் ஒரு சேர்ந்தால் நமது சமுதாயம் ஓரளவு தலை தூக்கும். இல்லையேல் இப்படி ஒரு சமுதாயம் இருந்தது என்று தொல்பொருள் காட்சியகத்தில் சரித்திரப் பெயர் பொறிக்கப்படுவது திண்ணம்…
இந்த நல்ல வேளையில் BN க்கு வாக்கு அளித்த அணைத்து ஹிந்து பெருமக்களுக்கு BN அம்னோ சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !
இந்த கோயில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதை கட்டுவதற்கு முன்போ அல்லது கட்டிய பிறகோ முறைப்படி ஒரு நிர்வாகத்தை அமைத்து அந்த கோயில் இடத்திற்கு விண்ணப்பம் இருந்தால் நிச்சயமாக அரசாங்கம் இதற்கு தக்க சான்றுகளுடன் பதில் சொல்லியே ஆகணும். இது மசூதியாக இருந்தால் இஸ்லாமிய சகோதரர்கள் சும்மாவா இருப்பார்கள். இங்கு இனத்தை கூறவில்லை. மதத்தை கூறுகிறேன். இதற்கு பி கே ஆர் மட்டுமே குரல் எழுப்ப வேண்டும் என்பதில்லை. இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்பினால் நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. மலேசியாவின் ருக்குன் நேகராவை முழுமையாக நம்புவோம். பாவம் வேத மூர்த்தி நம்பி கெட்ட கதையாக இருக்க கூடாது.
டி. மோகன் அவர்களே,
மன்னிக்கவும்…ம இ காவிலிருந்து குரல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துகள்..
ஒரு சேர்ந்து உரிமைக்குரல் எழுப்பும் உம சேவை தொடரவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்…இல்லையேல் காலப்போக்கில் நமது சமூதாயத்தின் உரிமைக்குரல் அம்பலமேராது. அம்னோகாரர்கள் நமது அடையாளத்தையே அழித்துவிடுவார்கள்…
எலெக்sன் முடிந்தது இனி என்ன amம்னோ ஆட்டம் tan