அம்னோ குடும்பத்தில் பிறந்தவர், இன்று டிஏபி-இன் வளரும் நட்சத்திரம்

1 dyanaடயனா சோப்யா முகம்மட் டாவுட், அம்னோவில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.  ஆனால், இன்று அவர், கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளர்.

சட்டம் பயின்றவரான டயனாவுக்கு, பூமிபுத்ராக்களுக்கென்றே உள்ள யுஐடிம்-இல் ஏற்பட்ட அனுபவம் இதற்கு ஒரு காரணம்.

“எனக்கு யுஐடிஎம்-இல் இடம் கிடைத்தது. ஆனால், என்னைப் போன்ற தேர்வுமுடிவுகள் பெற்றிருந்த என் (பூமிபுத்ரா அல்லாத) நண்பர்களுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவில்லை. உதவிச் சம்பளமும் கிடைக்கவில்லை.

“எனக்கு அது நியாயமாகப் படவில்லை”, என்று கடந்த மாதம் ஒரு நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

அதுவும் அதன்பின்னர் அவர், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளர் சைரில்  கீர் ஜொஹாரியைச் சந்தித்துப் பேசியதும் அவரை டிஏபி-க்குக் கொண்டு வந்தன.

அதற்காக சிலர் அவரைப் பழித்துரைத்தது உண்டு.

“என்னைத் ‘துரோகி’ என்று முத்திரை குத்தியதற்காகக் கவலைப்படவில்லை”, என்ற அவர் தம்மை எப்போதுமே ஒரு மலேசியன் என்றே கருதி வந்திருப்பதாகக் கூறினார்.