மஇகா தலைவர்: டிபிகேஎல் உடைத்தது கடைகளை கோவிலை அல்ல

palani-templeகோலாலம்பூர் ஜாலான் பி ரம்லியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், கோவில் தொடப்படாத  வரையில், மேற்கொள்ளப்பட்ட உடைப்பு வேலைகள் சரியானது தான் என்று  மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார்.

மஇகா தலைவராக போட்டியின்றி தேர்வு பெற்ற பின்னர் அந்தச் சம்பவம் பற்றி  நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது பழனிவேல் அவ்வாறு சொன்னார்.

அந்த கோவிலை இடிப்பதை நிறுத்துமாறு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு  அட்னான் தெங்கு மான்சோரைக் கேட்டுக் கொள்ளும் கடிதத்தை தாம் அவருக்கு  எழுதியதாக அவர் தெரிவித்தார்.

“அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் நான் தெங்கு அட்னானுக்கு கடிதம்  எழுதினேன். அவர்கள் மாநகரப் பகுதிக்குள் இருக்கும் இப்போதைய கோவிலை  உடைக்க விரும்பினர். ஆகவே நான் அறிக்கை ஒன்றைச் சமர்பித்தேன். அவரும்  கோவிலை வைத்திருக்க ஒப்புக் கொண்டார்.”

“ஆகவே அவர்கள் மற்ற எல்லா கடைகளையும் உடைக்க விரும்பினர். அது  சரியே.”

“கோவிலை அல்ல. கோவிலை அவர்கள் அப்படியே வைத்துள்ளனர். தெங்கு  அட்னானுக்குக் கடிதம் எழுதியது நான். அவர்கள் கோவிலை உடைக்கவில்லை,”  என்றார் பழனிவேல்.