கோயில் ‘உடைக்கப்பட்ட’ போது பத்து பேர் கைது (அண்மைய செய்தி)

templeகோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) ஜாலான் பி ரம்லியில் உள்ள 101  ஆண்டுகள் பழமையான கோவிலில் சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த முயன்ற  போது மஇகா இளைஞர் தலைவர் டி மோகன், பிகேஆர் போராளி எஸ் ஜெயதாஸ்  உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து மணி நேரத்திற்கு மேல் நீடித்த அந்த இழுபறியில் கைதானவர்களில் அந்த தங்க முக்கோண  முனீஸ்வரர் ஆலயத்தின் இரண்டு பிரதிநிதிகளும் அடங்குவர்.temple1

கைது செய்யப்பட்ட மற்றவர்களில் மஇகா இளைஞர் நிர்வாக மன்ற உறுப்பினர்களும் பிகேஆர் பாடாங் செராய் எம்பி என் சுரேந்திரனுடைய உதவியாளர் ஒருவரும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குக்  கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது.

temple2அந்தக் கட்டுமானப் பணி பற்றி கோவில் நிர்வாகக் குழுவுக்கு தகவல்
தெரிவிக்கப்படாததால் டிபிகேஎல் அதிகாரிகள் கோவிலுக்குள் நுழைவதை தாங்கள்  தடுக்க முயன்றதாக போராளிகள் கூறிக் கொண்டனர்.

என்றாலும் மேயர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் நாளை நோட்டீஸ் வெளியிடப்படும் என கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் தெங்கு அட்னானின் உதவியாளர் ஆர் ரமணன் தெரிவித்தார்.temple3

ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட போதிலும் இது அரசாங்க முடிவு என்பதால் அந்த வேலை தொடரும் என மஇகா, பிபிபி பேராளர்களை சந்தித்த பின்னர் ரமணன் கூறினார்.

temple4அரசாங்கம் Hap Seng Consolidated Bhd நிறுவனத்துக்கு கொடுக்கும் எட்டு அடி அகல நிலத்தில் குறியீடுவதற்காக அந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாக இழுபறி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அங்கு சென்ற ரமணன் சொன்னார்.

“அது கோவிலை உடைக்கும் வேலை அல்ல,” எனக் கூறிய அவர், அரசாங்க  நிலத்துக்குள் கோவில் ஊடுருவியுள்ளது என்றும் அந்தச் சுவர் ஒர் எல்லையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.