தேர்தல் மனுக்களை விசாரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் விதிக்கும் அதிகமான செலவுத் தொகைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அவை உதவும் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
அதிகமான செலவுத் தொகை தீவிரமாக இல்லாத மனுதாரர்களை தடுத்து நிறுத்தி விடும் என அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“நான் இன்று வரையில் ஏன் நான் ஒய்வு பெறுவதற்கு முன்பு கூட நீதிமன்றங்கள் உத்தரவிடும் செலவுத் தொகைகள் மிகவும் குறைவாக இருப்பதாக நான் எண்ணியிருக்கிறேன். நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்குரைஞர்களுக்குக் கட்டணமாக, சில வேளைகளில் நூறாயிரக்கணக்கான ரிங்கிட் கூட கொடுக்கப்படுகின்றது.”
“உத்தரவிடப்படும் செலவுத் தொகைகள் குறைவாக இருந்தால் மக்கள் அதனை தவறாகப் பயன்படுத்தி நல்ல காரணங்கள் இல்லாமல் தேர்தல் மனுக்களை சமர்பிப்பர். வழக்குகளைச் சமர்பிப்பதற்கான உரிமையை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றீர்கள்,” என்றார் ஸாக்கி அஸ்மி.
தேர்தல் மனு மக்களின் நியாயமான கோரிக்கையை நிலைநிறுத்தவே தவிர தொழில்நுட்ப தவறுகளால் தள்ளுபடி செய்ய அல்ல.
அனுபவமில்லா உமக்கு அம்னோ குத்தகை கொடுத்ததின் நோக்கத்தினை மக்கள் மறந்துவிடவில்லை.
ஐயா பெரியவரே , உங்கள் கருத்தை ஏற்பதாகவே வைத்துக்கொள்வோம். பணமுள்ள முதலைகள் மட்டும் தான் தேர்தலில் நிற்கமுடியும் , பணமில்லாதவன் வாயை திறக்ககூடாது என்பதுபோல் உள்ளது. ஏன் ஒரு நியாயமான குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யக்கூடாது ? மேல்முறையீடு செய்து , நிராகரிக்கப்பட்டால் இவ்வளு தொகையை கட்டவேண்டும் என்று அறிவிக்கவேண்டும். தோல்வி கண்டதும் கழுத்தில் கத்தி வைக்காதீர்.