டிபிகேஎல்-இக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோயில் ஆலோசனை

1 manoதங்க முக்கோணத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலய நிர்வாகக் குழு, கோயில் சிலைகளை அகற்றியதுடன் ஒரு பக்கத்து நிலத்தையும் எடுத்துக்கொண்ட கோலாலும்பூர் மாநகர் ஆட்சிமன்றத்துக்கு (டிபிகேஎல்) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறது.

அது எடுத்துக்கொண்டது அரசின் நிலம், அருகில் மேம்பாட்டுப் பணியில் ஈடுபடும் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது அல்ல என்று அக்குழுவின் சட்ட ஆலோசகர் எம்.மனோகரன் கூறினார்.

“விக்கிரகங்கள் அகற்றப்பட்டதும் சட்ட விரோதமாகும். அவர்களின் (டிபிகேஎல்) நடவடிக்கை நீதிமன்ற ஆணை அல்லது சட்டப்படியான அறிவிக்கை கொடுத்து அதன்பேரில் மேற்கொள்ளப்பட்டதல்ல. நிலத்தைச் சட்டவிரோதமாக எடுத்துக்கொள்ள டிபிகேஎல் ஏன் மேம்பாட்டாளருக்கு உதவி செய்கிறது?”, என்றவர் வினவினார்.