பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பின்னுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் காட்டுவது குறித்து பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது.
“முன்பு பாஸ் தலைவரும் மற்றவர்களும் பிஎன்னுடன் பேச்சு நடத்த விரும்பியபோது கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அன்வார் அரசாங்கத்துடன் கலந்துரையாட மிகவும் ஆர்வம் காட்டுகிறாரே, அது ஏன்?
“எதிரிகளின் அரசியல் ஆடுவதில் கவனம் தேவை. அன்வார் தன்னலம் பேணுவோரை நம்பி மோசம் போய்விடக்கூடாதே என்பதே எங்களின் கவலை”, என பாஸ் இளைஞர் உதவித் தலைவர் ராஜா அஹ்மட் இஸ்கண்டர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பிஎன்னுடன் கலந்துரையாடல் நடத்தும் ஆலோசனையை பக்காத்தான் தலைவர் மன்றம் கூடி விவாதிக்க வேண்டும் எனவும் பாஸ் இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டது.
ஆணவம் கொண்ட பேச்சாளர்களுடன் , கலந்துரையாடல் பேசுவது கடலில் கொட்டிய உப்புக்கு சமம் .