இஓ ரத்துச் செய்யப்பட்டதில் குற்றத்தைத் தடுக்கும் பயனான கருவி பறிபோனது

1-eoஅவசரகாலச் சட்டம்(இஓ) அகற்றப்பட்டதன்வழி போலீசார் குற்றங்களைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருந்த  ஒரு கருவியை இழந்து விட்டனர் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறுகிறார்.

“இப்போது இஓ இல்லாததால் முன்பு செய்ததைச் செய்ய முடியவில்லை.

“சிறுசிறு குற்றவாளிகளைப் பிடிக்கலாம். ஆனால், ‘தலைகள்’ தப்பி விடுகின்றனர்”, என மலாய்மொழி நாளேடான  சினார் ஹரியானிடம் அவர் கூறினார்.

தலைகளுக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டுவது சிரமமாக உள்ளது. யாரும் சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை என்றார்.

ஆனாலும் இஓ போன்ற ஒரு சட்டத்தை மீண்டும்  கொண்டுவர அரசாங்கம் எண்ணவில்லை.