2,433 கள்ளக் குடியேறிகள் கைது

1 arrestகுடிநுழைவுத் துறை நாடு முழுவதும் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் 2,433 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் புத்ரா ஜெயா, சிரம்பான், கம்பார், மலாக்கா, ஜோகூர் பாரு, குவாந்தான், கூச்சிங் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக த ஸ்டார் தெரிவித்தது.

கைதானவர்களில் இந்தோனேசியர்களே அதிகம் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

717 இந்தோனேசியர்கள், 555 மியான்மார் நாட்டவர், 387 வங்காள தேசிகள், 229 நேப்பாளிகள்  கைது செய்யப்பட்டனர்.

“இவர்கள் தவிர்த்து, கைதானவர்களில் கம்போடியா, வியட்னாம், பாகிஸ்தான், இந்தியா, சீனா, நைஜிரியா, தாய்லாந்து நாட்டவரும் இடம்பெற்றிருந்தனர்”, என்றாரவர்.